முக்கிய திக்ரு மற்றும் துஆக்கள்
பலமணி நேர திக்ரை மிகைக்கும்
நான்கு வரி திக்ரு (3 முறை)
سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ عَدَدَ خَلْقِهِ
وَرِضَا نَفْسِهِ
وَزِنَةَ عَرْشِهِ
وَمِدَادَ كَلِمَاتِهِ
சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி அதத கல்கிஹி,
வரிளா நஃப்சிஹி,
வஸினத்த அர்ஷிஹி,
வமிதாத கலிமாத்திஹி
நபி (ஸல்) அவர்களின் மனைவி ஜுவைரியா அவர்கள், சுப்ஹு நேரத்திலிருந்து, லுஹா நேரம் வரை திக்ர் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “மேற்கண்ட திக்ரை நான் மூன்று முறை கூறினேன். இவ்வளவு நேரம் நீ சொன்னவற்றை இது மிகைத்துவிடும்” என்ற கருத்துப்பட கூறினார்கள். ((முஸ்லிம்: 5272) ➚ ஹதீஸின் சுருக்கம்)
(பொருள்: அல்லாஹ்வுடைய படைப்புகளின் எண்ணிக்கை அளவுக்கும், அவன் உவக்கும் அளவுக்கும், அவனது அர் ஷின் எடையளவுக்கும், அவனுடைய சொற்களின் எண்ணிக்கை அளவுக்கும் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து அவனைத் தூயவன் எனத் துதிக்கிறேன்)
தினமும் 100 முறை
10 அடிமையை விடுதலை செய்த நன்மை
لا إلهَ إلاَّ اللَّه وحْدهُ لاَ شَرِيكَ لهُ، لَهُ المُلْكُ، و لَهُ الحمْدُ، وَهُو عَلَى كُلِّ شَيءٍ قَدِيرٌ
லா இலாஹ இல்லல்லாஹு
வஹ்தஹு லாஷரீக்க லஹு
லஹுல் முல்க் வலஹுல் ஹம்து
வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர்
என்று ஒரு நாளில் நூறு முறை சொல்கிறவருக்கு, (ஒவ்வொரு நாளும்) பத்து அடிமைகளை விடுதலை செய்த நன்மையும், மேலும் அவருக்கு 100 நன்மைகளும் எழுதப்படும். 100 தீமைகள் அழிக்கப்படும். மேலும், அவரின் அந்த நாளில் மாலை நேரம் வரும் வரை ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பாக இருக்கும். மேலும், அவர் செய்த இந்த நற்செயலை விட எவரும் செய்ய முடியாது. ஒருவர் இதை விட அதிகமாக செய்தாலே தவிர என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ((முஸ்லிம்: 5221) ➚)
பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாரும் இல்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றிற்கும் வலிமையுடையவன்.
காலை, மாலை 100 முறை
இதைவிட சிறந்த அமல் இல்லை
سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ
சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி
என்று யார் காலையிலும் மாலையிலும் நூறு முறை என்று சொல்பவர் கொண்டு வந்ததைவிடச் சிறந்ததை வேறெவரும் மறுமைநாளில் கொண்டு வரமாட்டார். அவர் சொன்ன அளவுக்குச் சொன்னவரையும் அல்லது அதைவிடக் கூடுதலாகச் சொன்னவரையும் தவிர என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்: 5222) ➚ மேலும், ஒருவரின் பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும் மன்னிக்கப்படும் ((முஸ்லிம்: 5221) ➚)
பொருள்: அல்லாஹ் தூயவன் எனப் போற்றிப் புகழ்கிறேன்