மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். புகழுக்குரிய இடத்தை அடைபவர் கியாம நாளில் நபி (ஸல்) அவர்களுக்கு என்று தனியான மிக அந்தஸ்திற்குரிய ஒர் இடம் உண்டு. அதைப்பற்றி ஒரு நீண்ட ஹதிஸின் தொடரில் இடம் பெற்றுள்ளது. “இறுதியில் குர்ஆன் தடுத்துவிட்ட, அதாவது நிரந்தர நரகம் கட்டாயமாகி விட்டவர்களைத் தவிர வேறு யாரும் […]