கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இருவேறு எதிர்பார்ப்புகளுடைய நாடுகளையோ அல்லது மாநிலங்களையோ அல்லது மனிதர்களையோ இணைப்பதற்கு ஒப்பந்தங்கள் அவசியமாகின்றன. பெரும்பாலான ஒப்பந்தங்கள் மனித வளத்தைச் சீரழிப்பதற்காகவே அரங்கேறுகின்றன. வீணான ஒப்பந்தங்களைத் தெரிந்து கொள்வதற்கு ஆர்வம் காட்டும் நம்மில் பலர், படைத்த இறைவனிடம் செய்து கொடுத்த ஒப்பந்தத்தைத் தெரிந்து கொள்வதற்கு ஆர்வம் காட்டுவதில்லை. படைத்த […]