வாங்கும் எண்ணம் இல்லாமல் ஏலத்தில் விலை ஏற்றக்கூடாது نَهَى النَّبِيُّ : عَنِ النَّجْشِ. வாங்கும் நோக்கமின்றி விலை உயர்த்துவதற்காக விலையை அதிகம் கேட்பதை நபி (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), நூல் : (புகாரி: 2142) ➚ அடுத்தவர் விலை பேசிக்கொண்டிருக்கும் போது குறிக்கிட்டு விலை பேசக்கூடாது لاََ يَبِيعُ بَعْضُكُمْ عَلَى بَيْعِ أَخِيهِ. ஒருவர் வியாபாரம் செய்துகொண்டிருக்கும்போது, தாம் வியாபாரம் செய்வதற்காக எவரும் குறுக்கிடக் கூடாது என்று […]